×

சிக்கிமில் கார் விபத்து தமிழக வீரர் உட்பட 4 ராணுவத்தினர் பலி

காங்டாக்: மேற்கு வங்க மாநிலத்தின் பின்னாகுரியில் இருந்து ராணுவ வீரர்கள் சிக்கிம் மாநிலத்தின் பாக்யோங் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். ரெனாக்- ரோங்லி நெடுஞ்சாலையில் வெர்டிக்கில் பீர் என்ற இடத்தில் கார் சென்றபோது சாலையை விட்டு விலகி காட்டுப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த சுபேதார் தங்கபாண்டி, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் படேல், இம்பாலை சேர்ந்த பீட்டர், அரியானாவை சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

 

The post சிக்கிமில் கார் விபத்து தமிழக வீரர் உட்பட 4 ராணுவத்தினர் பலி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sikkim Gangtok ,West Bengal ,Pinnakuri ,Sikkim ,Pakyong ,Vertikil Bir ,Renagh-Rongli highway ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!