×

ஜிஎஸ்டி செலுத்துவோரின் எண்ணிக்கை 3-4% உயர்வு.. சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு!!

சென்னை: சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை பகிர வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெறும் வருவாய் கணக்கு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான நிகழ்ச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்; சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து தவறான தகவல்; பொருளாதாரம் குறித்து பேசுபவர்களில் 10 பேர்தான் சரியான தகவலை கூறுகிறார்கள்.

பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் வருமான வரி செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம். வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம். அரசுக்கு வருவாய் ஈட்டுவது குறித்த திட்டங்களைக் கூட பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கடைசியாகத்தான் ஆலோசிக்கிறோம். 2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தபோது கூட இந்தியாவில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. பொருள்களுக்கான வரி கடந்த 5 ஆண்டுகளில் 1 விழுக்காடு கூட உயர்த்தப்படவில்லை.

ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3-4 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய முறை மூலம் வருமான வரி செலுத்துவது எளிமையாக்கப்பட்டுள்ளது. 1.47 கோடி நபர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துகின்றனர். ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3-4% அதிகரித்துள்ளது. நேரடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதால் ஒன்றிய அரசுக்கு ரூ.7.79கோடி வருவாய் கிடைத்துள்ளது. செப்டம்பர் 9ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 3 நாட்கள் நடைபெற உள்ளது எனவும் அவர் கூறினார்.

The post ஜிஎஸ்டி செலுத்துவோரின் எண்ணிக்கை 3-4% உயர்வு.. சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு!! appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Chennai ,Union Finance Minister ,Revenue Account Lawyers Association ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு