×
Saravana Stores

சென்னை வேளச்சேரியில் 9 மாதம் முன்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: மண்டை ஓடு மீட்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் 9 மாதம் முன்பு 50 அடி பள்ளத்தில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவரின் மண்டை ஓடு மீட்கப்பட்டுள்ளது. சென்னை, வேளச்சேரியில் டிச.4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து 8 பேர் சிக்கியிருப்பத்தாக கூறப்பட்டது.

கனமழை தொடர்ந்து பெய்து வந்த காரணத்தால் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வந்த நிலையில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புயலின் போது 50 அடி கட்டுமான பள்ளத்தில் வெள்ளம் புகுந்து சகதியில் சிக்கிக் கொண்ட நரேஷ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.கிட்டதட்ட 100 மணி நேரமாக நடைபெற்று வந்த தொடர் மீட்புப் பணியில், நரேஷ் மற்றும் ஜெயசீலன் சடலமாக மீட்கப்பட்டனர்.

2 பேரின் உயிரை பலி வாங்கிய 40 அடி பள்ளத்தில் மேலும் ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. 7 மாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை . எனவே அவரும் 40 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், 2023 ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிக்கு தோண்டிய 50 அடி பள்ளத்தில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி காணாமல்போன மேற்குவங்க தொழிலாளி தீபக் பக்டியின் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னை வேளச்சேரியில் 9 மாதம் முன்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: மண்டை ஓடு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Velachery ,CHENNAI ,Velachery, Chennai ,Chennai, Velachery ,Dinakaran ,
× RELATED சென்னையில் தேசிய அளவிலான துப்பாக்கி...