×

அரசு பஸ் மீது கல்வீச்சு

மேட்டூர், செப்.5: மதுரையிலிருந்து சேலம் வழியாக மேட்டூர் நோக்கி அரசு பஸ் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. மேச்சேரி அருகே உள்ள 5வது மைல் பகுதிக்கு வந்தபோது டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள் அரசு பஸ் மீது சரமாரியாக கல் வீசி தாக்கினர். பஸ் டிரைவர் லோகநாதன்(45) லாவகமாக பஸ்சை இயக்கி பயணிகளை காயமின்றி காப்பாற்றினார். ஆனாலும் பேருந்தின் அவசர கால கதவின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறினர். சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசில் பஸ் டிரைவர் லோகநாதன் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அடுத்தடுத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலையில் பஸ் மீது கல்வீசி தாக்கியது திருட்டு கும்பலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Madurai ,Salem ,Mecheri ,Dinakaran ,
× RELATED சொத்து குவித்த அரசு ஊழியர் மீது...