- சௌ சௌ பயிர்
- கொடைக்கானல்
- கே.சி.பட்டி.
- சௌ சௌ
- ஆத்மா திட்டம்
- தோட்டக்கலை துறை
- கே.சி.பட்டி
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
- உதவியாளர்
- மணிவண்ணன்
- KC.பட்டி சௌ சௌ
- தின மலர்
கொடைக்கானல், செப். 5: கொடைக்கானல் கீழ்மலை கேசி.பட்டி கிராமத்தில் தோட்டக்கலை துறை மூலம் செயல்படும் அட்மா திட்டம் மூலம் சவ் சவ் விவசாயத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் மணிவண்ணன் விவசாயிகளுக்கு சவ் சவ் பயரில் மண்ணியல், நடவு முறை, உர மேலாண்மை பற்றியும், இப்பயரில் ஏற்படும் வைரஸ் நோய் கட்டுப்பாடு முறையில் மஞ்சள் ஒட்டு பொறி, இனகவர்ச்சி பொறி, விளக்கு பொறி பற்றியும் அதன் செயல் விளக்கம் பற்றியும் விளக்கி கூறினார். மேலும் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றியும், தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர்கள் கார்த்திகேயன், சந்திரசேகர் செய்திருந்தனர்.
The post கொடைக்கானல் கேசி.பட்டியில் சவ் சவ் பயிரில் மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.