×
Saravana Stores

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு: ஹரியானா தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்ப்பு!!

டெல்லி: மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா கூறுகையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 66 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி சார்பில் 10 இடங்கள் கோரப்பட்டுள்ளன. 90 இடங்களில், 49 இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து நேற்றும் இன்றும் விவாதிக்கப்பட்டது. மேலும் உள்ள 41 இடங்களில் 32 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்களில் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும், மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்படுவார்களா என்பது குறித்து, வியாழக்கிழமைக்குள் தெரிய வரும்” என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று காலை காஷ்மீர் செல்வதற்கு முன் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை சந்தித்தார். ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுள்ளது. ராகுல் காந்தி உடனான சந்திப்பு ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

The post காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு: ஹரியானா தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Vinesh Phogat ,Bajrang Punia ,Congress ,Rahul Gandhi ,Haryana ,elections ,Delhi ,Lok ,Sabha ,Congress party ,general secretary ,Indian Congress party ,Deepak Babaria ,Dinakaran ,
× RELATED என்னை வெற்றிபெற செய்த ஜூலானா மற்றும்...