- புத்தூர் ஸ்ரீனிவாசா அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- கொல்லிமடம்
- புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- புத்தூர் ஸ்ரீனிவாச சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரி
- கொள்ளிடம்
- மயிலாதுதுரை மாவட்டம்
- விழுப்புரம் மாவட்டம்
கொள்ளிடம்,செப்.4: கொள்ளிடம் அருகே புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் மாவட்டம் சூர்யா தொழில்நுட்பக் கல்லூரியில் மண்டல அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து மற்றும் பெண்களுக்கான துரோபால் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணியுமே மண்டல அளவில் வெற்றி பெற்று வெற்றிக்கோப்பை பெற்றனர்.
மேலும் நேற்று முன்தினம் சீர்காழியில் நடைபெற்ற போதைப் பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். கல்லூரி முதல்வர் குமார், கல்லூரி கண்காணிப்பாளர் வைத்தியநாதன், துறைத்தலைவர்கள் செந்தில்குமார், விஜயலட்சுமி, கீதா, ஆஷிக்கலி, குமணன், எர்னெஸ்ட் ஜெயக்குமார், அணி மேலாளர் விரிவுரையாளர் காயத்ரி, உடற்கல்வி இயக்குனர் உமாநாத் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
The post மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் புத்தூர் சீனிவாசா அரசு பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி appeared first on Dinakaran.