×

மயிலாடுதுறை கலெக்டர் எச்சரிக்கை நடைபயிற்சி மேற்கொள்வதன் அவசியம் குறித்து வேளாங்கண்ணி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

 

நாகப்பட்டினம்,செப்.4: வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திறந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் சுகாதாரத்துறை சார்பில் நடைப்பயிற்சி மேற்கொள்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடத்தினர். சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்த நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தின் படி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இதில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு பணி தொடர்பாக வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காதார ஆய்வாளர்கள், சுகாதார துறையினர் கலந்து கொண்லி நடை பயிற்சி மேற்கொண்டனர். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் தொடங்கிய நடைப்பயிற்சி ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை, கடைவீதி, பேராலயம் வழியாக மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது நடைப்பயிற்சி மேற்கொள்வதில் அவசியம் குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார மேற்பார்வையாளர் செல்வன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மோகன், ரகுநாதன் ஆகியோர் நடைபயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

The post மயிலாடுதுறை கலெக்டர் எச்சரிக்கை நடைபயிற்சி மேற்கொள்வதன் அவசியம் குறித்து வேளாங்கண்ணி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Velankanni ,Nagapattinam ,Our Lady of Health ,
× RELATED இலங்கை கடற்படை கப்பல் மோதி நாகை...