×

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும்: லாலு பிரசாத் உறுதி

பாட்னா: “அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோர் நலன் பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என ஆர்எஸ்எஸ் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தது. இது குறித்து பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தன் எக்ஸ் பதிவில், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் பயன் பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவர்கள் தங்கள் ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்படி பாஜ, ஆர்எஸ்எஸ்சுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

 

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும்: லாலு பிரசாத் உறுதி appeared first on Dinakaran.

Tags : Lalu Prasad ,Patna ,RSS ,Bihar ,Chief Minister ,Rashtriya Janata Dal ,Lalu Prasad Yadav ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க...