×

ஜம்மு காஷ்மீரில் ராகுல் இன்று பிரசாரம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஜேகேஎன்பிபி ஆகிய கட்சிகள் கூடடணி வைத்துள்ளன.

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீரில் பிரசாரம் செய்ய உள்ளார்.

 

The post ஜம்மு காஷ்மீரில் ராகுல் இன்று பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Jammu and Kashmir ,Jammu ,Jammu and Kashmir assembly elections ,National Conference Party ,Farooq Abdullah ,Jammu and Kashmir Assembly ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை