×
Saravana Stores

பலாக்கொட்டை துவையல்

தேவையான பொருட்கள் :

பலாக்கொட்டை – 10 எண்ணம்
வற்றல் மிளகாய் – 5
தேங்காய் துருவல் – 1/2 கப்
சிறிய உள்ளி – 5
பூண்டு – 4 பல்
ஜீரகம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு

செய்முறை :

ஒரு சீனச்சட்டி அடுப்பில் வைத்து அதில் பலாக்கொட்டையைப் போட்டு மீடியம் ஃப்ளேமில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பலாக்கொட்டையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.வற்றல் மிளகாயையும் சீனச் சட்டியில் வறுத்து எடுக்கவும். அதே சீனச் சட்டியில் 2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சிறிய உள்ளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிதாக வதக்கி எடுக்கவும்.மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வறுத்த பலாக்கொட்டை, வற்றல் மிளகாய், ஜீரகம், வதக்கிய சிறிய உள்ளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பும் சேர்த்து துவையல் பருவத்தில் அரைத்து எடுக்கவும். மிகவும் சுவையான பலாக்கொட்டை துவையல் ரெடி.

The post பலாக்கொட்டை துவையல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆயுர்வேதத் தீர்வு!