×

பொன்னையாற்று ரயில்வே மேம்பாலத்தில் விரிசல்: ரயில் போக்குவரத்துக்கு தடை

திருவலம்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள பொன்னையாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் உள்ளது. ரயில்வே ஊழியர்கள் நேற்று மாலை இந்த மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேம்பாலத்தின் 38, 39வது தூணுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவ்வழியாக வரும் ரயில்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. மேலும் சென்னை கோட்ட ரயில்வே பொறியாளர் தலைமையில் பொறியாளர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில் சென்னையில் இருந்து செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது. ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த ரயில்கள் பொன்னையாற்றில் உள்ள மற்றொரு ரயில்வே மேம்பாலத்தில் ஒருவழி பாதையாக மாற்றி திருப்பிவிடப்பட்டது. பல மணி நேரம்தாமதத்திற்கு பிறகு ஒவ்வொரு ரயிலாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்….

The post பொன்னையாற்று ரயில்வே மேம்பாலத்தில் விரிசல்: ரயில் போக்குவரத்துக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Thiruvalam ,Ponnaiyar ,Katpadi ,Vellore district ,Ponnayaru ,Dinakaran ,
× RELATED ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!!