×

புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: ப.சிதம்பரம் வரவேற்பு

டெல்லி: புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் மகிழ்ச்சி என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் நபர்களின் வீடுகள், சொத்துகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கும், தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரது வீட்டை சட்டத்துக்கு புறம்பாக இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. புல்டோசர் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என 2024 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தோம் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

The post புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: ப.சிதம்பரம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chidambaram ,Delhi ,Minister ,P. Chidambaram ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...