- சுபா இளவரசன்
- ஜெயங்கொண்டம்
- சுப இராக்ஷசன்
- சுப இளரசன்
- தமிழர் நீதி கட்சி
- ஏர் உளவர் சங்கம்
- ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி
- அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம், செப்.3: ஜெயங்கொண்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பலகை வைத்ததாக சுபா இளவரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகில் தமிழர் நீதிக்கட்சி மற்றும் ஏர் உழவர் சங்க நிறுவனத்தலைவர் சுபா இளவரசன் வசித்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உரிய அனுமதி இன்றியும் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் கமிட்டி அருகாமையில் விளம்பர பதாகை வைத்ததாக ஜெயங்கொண்டம் விஏஓ பாக்யராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு விளம்பர பதாகைகளையும் அகற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் சுபா இளவரசன் மீது உரிய அனுமதி இன்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் விளம்பர பதாகை வைத்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post 543 மனுக்கள் பெறப்பட்டது அனுமதி இன்றி விளம்பர பதாகை வைத்த சுபா இளவரசன் மீது வழக்கு appeared first on Dinakaran.