- ஒரசாலை பள்ளி
- பள்ளி நிர்வாகக் குழு
- கோத்தகிரி ஓரச்சோலை பள்ளி
- ஓரசோலை தொடக்கப்பள்ளி
- கோத்தகிரி
- முதல் அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- ஓரசோலை பள்ளி
- தின மலர்
ஊட்டி, செப்.3: கோத்தகிரி ஒரசோலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கோத்தகிரி அருகேயுள்ள ஒரசோலை துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் ஆணைப்படி 2024-2026 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பொறங்காடு சீமை தலைவர் ராமாகவுடர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கருத்தாளர் கிருஷ்ணவேணி பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில், பல்வேறு கருத்துகள் முன்னெடுத்து விவாதிக்கப்பட்டது.
மேலும், புதிய தலைவியாக நிஷாந்தி, துணை தலைவியாக வேளாங்கண்ணி, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் பிரதிநிதி, உள்ளாட்சி பிரதிநிதி, இதர உறுப்பினர்கள் என மொத்தம் 24 பேர்கள் தேர்வு செய்யபட்டனர். முன்னதாக இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும், பள்ளி கல்வி அமைச்சர் பேசிய காணொளி காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post ஒரசோலை பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.