- சவூதி அரேபியா
- சென்னை
- ஜனாதிபதி
- நிர்வாக இயக்குனர்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
- சி என் மகேஸ்வரன்
- சவூதி அரேபியா அமைச்சு
- வேலைவாய்ப்பு நிறுவனம்
- தின மலர்
சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக் காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in- ல் கண்டு பயனடையலாம்.
மேலும் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (வாட்ஸ்அப் எண்: 9566239685 / 6379179200), தொலைபேசி எண்: 044-22505886 / 044-22502267. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரிடையாக பதிவு செய்து இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம்.
The post சவுதி அரேபியாவில் மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.