வேலூர்: சதுர்த்தி விழாவுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்படைந்துமுள்ளது. ₹250 முதல் ₹40 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, அப்துல்லாபுரம், கல்புதூர் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் சூளைமேடு, மண்பாண்ட தொழிலாளர்கள் சதுர்த்தியை முன்னிட்டு 1 அடி முதல் 12 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்வதால் தங்களுக்கு உபரி வருமானமும், தொழில் பாதுகாப்பு கிடைப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்கு சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் விநாயகர் சிலைகள் வாங்கி செல்கின்றனர்.
வீடுகளில் வைத்து பூஜை செய்யும் வகையில் சிலைகள் மற்றும 2 அடியில் இருந்து 7 அடி உயரம் வரையிலான பெரிய சிலைகளும் தயாரித்து வைத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் வடிவங்கள் மற்றும் உயரத்திற்கு ஏற்ப ₹8 ஆயிரம், ₹30 ஆயிரம் விற்பனை செய்யப்படுகிறது. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ₹250 முதல் ₹1,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்திக்கு தாயாரான விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வகையில், மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூல், ஜவ்வரிசி தண்ணீர் ஆகியவை கொண்டு வெயிலில் காய வைத்து வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக ெதாழிலாளர்கள் தெரிவித்தனர்.
The post சதுர்த்தி விழாவுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.