×

விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண குழு

டெல்லி: ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா மாநில எல்லையான ஷம்புவில் பல நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண குழு appeared first on Dinakaran.

Tags : Committee to Resolve Farmers' Struggle ,Delhi ,Shambu border ,Supreme Court ,High Court ,Nawab Singh ,Committee ,Dinakaran ,
× RELATED டெல்லி நோக்கி பேரணி போராட்டம் ஷம்பு...