×

சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு!

சென்னை: சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையார்கள் அறிவித்துள்ளனர். நாட்டில் உள்ள சுங்கச்சாவடி கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 67 சுங்கச் சாவடிகளில் இரண்டு தவனையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை பொறுத்தவரை விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்ப 25 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டது.

5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையார்கள் அறிவித்துள்ளனர். வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தையும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் உயர்த்தி உள்ளனர்.

மேலும் இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இப்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Omni bus ,National Highways Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம்...