×
Saravana Stores

காஷ்மீர் முதல் டெல்லி வரை 100 பேர் 1000 கி.மீட்டர் நடைபயணம்… லே, கார்கிலை நாடாளுமன்ற தொகுதியாக்கக் கோரிக்கை!!

ஸ்ரீநகர் : காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் லேயில் இருந்து டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் லே எபெக்ஸ் பாடி மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், ஒன்றிய அரசு பணிகள் வழங்குவதில் சம வாய்ப்பு மற்றும் லே, கார்கிலை நாடாளுமன்றத் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வணக்கம் டெல்லி என்ற நடைப்பயணத்தை தொடங்கி உள்ளனர்.

காஷ்மீரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தலைமையில் 100 பேருக்கும் மேற்பட்டோர் இந்த பயணத்தில் பங்கெடுத்துள்ளனர். லே -வில் தொடங்கி டெல்லி வரை 1000கிமீ தூரத்திற்கு அக் 2ம் தேதி வரை இந்த நடைபயணம் நடக்க உள்ளது. காந்தி ஜெயந்தி அன்று இவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து ராஜ்காட்டில் போராட்டம் நடத்த உள்ளனர். ஜம்மு -காஷ்மீரில் செப் 18ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பயணம் நடைபெறுகிறது.

The post காஷ்மீர் முதல் டெல்லி வரை 100 பேர் 1000 கி.மீட்டர் நடைபயணம்… லே, கார்கிலை நாடாளுமன்ற தொகுதியாக்கக் கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Delhi ,Kargil ,Srinagar ,Leh ,Jammu-Kashmir ,Ley Apex Body ,Kargil Democratic Alliance ,Union Government ,Ley ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் அதிகாலையில் ஏற்பட்ட...