- வேளாங்கண்ணி அரசு
- வேளாங்கண்ணி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா
- வேளாங்கண்ணி அரசு
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி சென்னை இடையே இயக்கப்பட்ட சிறப்பு பேருந்தில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சிறப்பு பேருந்தில் மதுபோதையில் சில இளைஞர்கள் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக முந்தியடித்து ஏற முற்பட்டனர். அதில் பெண் ஒருவர் இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இரு தரப்பினரும் பேருந்திற்குள் அடித்து கொண்டனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் இடம்பிடிப்பதில் மது மற்றும் கஞ்சா போதையில் பெண்ணை தாக்கியதாகவும். தட்டி கேட்ட குடும்பத்தினர் மற்றும் சக பயணிகளிடையே போதை ஆசாமிகள் சண்டையிட்டதாகவும் இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
The post வேளாங்கண்ணி அரசு சிறப்பு பேருந்துக்குள் சீட் பிடிப்பதில் தகராறு: போதையில் இருந்த இளைஞர்கள் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல் appeared first on Dinakaran.