×

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி அஞ்சல் துறை சார்பில் விளையாட்டு போட்டி

தேனி, செப். 2: தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேனி அஞ்சல் ஊழியர்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தேனியில் உள்ள காமராஜர் பூங்கா மைதானத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, தேனி அஞ்சல் கோட்டம் சார்பில் அஞ்சலக ஊழியர்களுக்கிடையேயான விளையாடடு போட்டிகள் நடந்தது.

இப்போட்டிகளை தேனி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் இருந்தும் ஏராளமான ஊழியர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். விழா முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் குமரன் பரிசுகளையும், பரிசுக்கோப்பைகளையும் வழங்கினார். முடிவில் அஞ்சல ஊழியர்கள் பிட் இந்தியா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post தேசிய விளையாட்டு தினத்தையொட்டி அஞ்சல் துறை சார்பில் விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Department of Posts ,National Sports Day ,Theni ,Theni Post ,Kamaraj Park ,Theni Postal Division ,Dinakaran ,
× RELATED மத்திய, மாநில விளையாட்டு அமைப்புகள்...