- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- சஜித் பிரேமதாச
- இலங்கை அதிபர் தேர்தல்
- கொழும்பு
- ஜனாதிபதி
- இலங்கை
- ரணில் விக்ரமா சிங்கெஸ்
- 21 வது
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கேசின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவடைய உள்ளதையடுத்து ,k;khjk; 21ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே சுயேச்சையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
மேலும், ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாசா, சுதந்திர கட்சி தலைவருமான விஜயதாச ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுலா கட்சி வேட்பாளராக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
மேலும் இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழ் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வை உறுதி செய்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று நடத்தியஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழர் வேட்பாளராக போட்டியிடும் அரியநேத்திரனை தேர்தலில் இருந்து விலகுமாறு வலியுறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
The post இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு appeared first on Dinakaran.