×

நடிகர் கமல்ஹாசனை மலையாள திரைப்பட உலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் காலமானார்!!

சென்னை : திரைப்பட இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.மலையாள இயக்குனரான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனை மலையாள திரைப்பட உலகில் அறிமுகப்படுத்திவர் இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன். நாளை நமதே உள்ளிட்ட 75 படங்களை இயக்கியுள்ளார்.சிறந்த திரைப்படங்களை இயக்கியதற்காக தேசிய விருது, பிலிம் பேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.கே. எஸ். சேதுமாதவன் அவர்களின் உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. …

The post நடிகர் கமல்ஹாசனை மலையாள திரைப்பட உலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் காலமானார்!! appeared first on Dinakaran.

Tags : K. ,Kamal Haasan ,S. Chetumadavan ,Chennai ,K. S. Sethumadhavan ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...