×
Saravana Stores

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வலியுறுத்தல்

ெசன்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் செயலாகும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வதால் பேருந்து, லாரி, வேன் போன்றவற்றுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு, அதில் ஏற்றப்படும் பொருட்களின் விலையும் உயரக் கூடும்.
இதேபோல் கட்டுமான தொழிலுக்கு ஏற்கனவே 18% ஜிஎஸ்டியும், சிமெண்ட்க்கு 28% ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டு இருப்பது அநியாயத்தின் உச்சமாகும்.

இதனால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து தொழில் முடங்கும் அபாயம் ஏற்படும். மனைத் தொழிலை முடக்குகிற வகையில் ஒன்றிய அரசு அளவுக்கு மீறி ஜிஎஸ்டி வரியை விதித்திருப்பது தொலைநோக்கு பார்வை இல்லாத ஒரு அரசின் முடிவாகும். எனவே மனைத் தொழிலுக்கு ஜிஎஸ்டியை அடியோடு நீக்குவதுடன், சுங்கக் கட்டண உயர்வையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Farmers-Workers Party ,Jesanna ,Tamil Nadu Farmers-Workers Party ,President ,Ponkumar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருச்சி சிறையில் சீன கைதிகளிடம் ஈ.டி. விசாரணை