×

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்பகுளத்தில் இன்று முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன்பு தெப்பகுளத்தில் உள்ள நீர் முழுவதும் அகற்றப்பட்டு குழாய்கள் மற்றும் தெப்பகுளத்தில் பழுது பார்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு பிரம்மோற்சவம் அக்டோபர் 4 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் தெப்பகுளத்தில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு சுத்தம் செய்து பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அந்த பணிகள் முடிந்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராட அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதி உலா பின்பு புஷ்கர ஆரத்தி இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.53 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமையான நேற்று 81,207 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,414 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் 4.53 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பின்னர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupathi Elomalayan Temple ,Toppool ,Devastanam ,Thepakul ,Tirupathi Elumalayan Temple ,Brammorashava ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 4ம்தேதி பிரம்மோற்சவம்