×

தீபாவளிக்கு வெளியாகிறது அயலான்

சென்னை: சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள அயலான் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கியவர் ஆர்.ரவிகுமார். இவரது அடுத்த படம்தான் அயலான். வேற்று கிரகத்திலிருந்து ஏலியன் ஒன்று பூமிக்கு வந்துவிட, சிவகார்த்திகேயனுடன் அது நட்பாகிறது. அதன் பிறகு சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்தான் படத்தின் கதை. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியீடான ‘அயலான்’, தீபாவளிக்கு வெளியாகிறது. இது குறித்து கேஜேஆர் ஸ்டுடியோஸ், கோட்டபாடி ஜே. ராஜேஷ் கூறுகையில், ‘இந்த படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, ‘அயலான்’ படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.

அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்தில் அதிக எண்ணிக்கையிலான சிஜி காட்சிகளைக் கொண்டிருக்கும் படமாக உருவாகியுள்ளது. 4500+ விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும். பல ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய ஃபேன்டம் எஃப்எக்ஸ் நிறுவனம் கிராபிக்ஸ் பணிகளை சிறப்பாக மேற்கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் ‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்’ என்றார்.

The post தீபாவளிக்கு வெளியாகிறது அயலான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ayalan ,Chennai ,Sivakarthikeyan ,Rahul Preet Singh ,R. Ravikumar ,Vishnu Vishal ,earth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்