×
Saravana Stores

சாத்தூர் அருகே ரூ.1.8 கோடியில் உயர் மட்ட பாலம் திறப்பு

சாத்தூர்: சாத்தூரில் இருந்து மன்னார்கோட்டை செல்லும் சாலையில் ராமலிங்காபுரம் உப்போடையில் தரைபாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. மழை காலங்களில் இந்த பாலத்தில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், ராமலிங்காபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்களால், சாத்தூருக்கு வர முடியாதநிலை ஏற்பட்டது.

இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கிராமங்கள் துண்டிக்கப்படுவதை தவிர்க்க, தமிழ் நாட்டில் நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தரை மற்றும் கண் பாலங்கள் அனைத்தும் தமிழ்நாடு முதல்வரின் உத்தரவில் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சாத்தூர் மன்னார்கோட்டை சாலை ராமலிங்காபுரம் பொதுப்பணித்துறை பாசன கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் கண் பாலம் ரூ.1.8 கோடி மதிப்பில், உதவி கோட்டப் பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் அபிநயா ஆகியோர் மேற்பார்வையில் உயர் மட்ட பாலமாக மாற்றி அமைப்பட்டு தற்போது பொதுமக்கள் பயண்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

The post சாத்தூர் அருகே ரூ.1.8 கோடியில் உயர் மட்ட பாலம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Mannarkot ,Ramalingapuram Uppodai ,Ramalingapuram ,Sattur ,
× RELATED சாத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்