ஊட்டி, செப். 1: கூடலூர் குறு மைய அளவிலான பள்ளிகளுக்கு இடையே தடகளப் போட்டிகள் ஊட்டியில் நடந்தது. 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை நடத்தும் விளையாட்டு போட்டிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆறு குறு மைய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. கூடலூர் குறு மைய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடத்தி வருகிறது. இதில், கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தடகள போட்டிகளில் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 100 மீ., 200 மீ., 400, மீ.,600 மீ.,800 மீ.,150 மீ., மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளும் நடந்தது. தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன. தடகள போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்குபெற உள்ளனர். இந்த தடகள போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர்.
The post குறு மைய அளவிலான தடகளப் போட்டிகள் appeared first on Dinakaran.