×

பெரிய வெண்மணி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

 

குன்னம், செப். 1: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய வெண்மணி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சேசு முகாமை தொடங்கி வைத்தார்.

பெரிய வெண்மணி, சின்ன வெண்மணி, புது குடிசை, கொத்தவாசல் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரிய சிகிச்சை பெற்றனர். மருத்துவர்கள் அனிதா, சத்தியா, அறிவழகன், அன்பழகன், யாசர் அராபத் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் பல் மருத்துவம், கண் மருத்துவம் உட்பட ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டன.

The post பெரிய வெண்மணி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Artist's Varumun Kappom Project ,Periya Venmani Village ,Gunnam ,Artist ,Varumun ,Kappom ,Vypur ,Gunnam district ,Perambalur district ,Panchayat Council ,President ,Periyaswamy ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அருகே 261.228 கிலோ குட்கா பதுக்கியவர் கைது