×
Saravana Stores

நிதி நிறுவன மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் மயிலாப்பூர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளா்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, ஜாமீன் கோரி தேவநாதன் உள்ளிட்ட 3 போ் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலா் வாலண்டினா முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலீட்டாளா்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பித் தர தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும் எனவும் தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் ஒரு நிறுவனத்தையும் சோ்த்து மொத்தம் 5 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவா் தலைமறைவாக உள்ளாா். 800க்கும் மேற்பட்டோா் புகாா் அளித்துள்ளனா். தினமும் புகாா்கள் வந்து கொண்டே இருக்கின்றன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மோசடி வழக்கில் கைதான மூன்று பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிதி நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது 3 கிலோ தங்கம் மற்றும் 35 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் நிலம் தொடர்பான 15 ஆவணங்கள் உள்ளிட்டவையை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post நிதி நிறுவன மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Devanathan ,CHENNAI ,Mylapore ,The Mylapore Hindu Pomanet Fund ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு;...