விருதுநகர் : 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுத்துள்ளனர். ஒள்அரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்” மணிமேகலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்கியதும், இன்பவளமும் – பொருள்வளமும் சிறந்த வாழ்க்கையை முன்னெடுத்ததும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வெண்சங்கால் செய்யப்பட்ட அணிகலன்களை அவர்கள் பயன்படுத்தியது மணிமேகலை உள்ளிட்ட பல காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேலும் ஒரு சாட்சியாக விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியையும், தமிழர் நாகரிகம் குறித்த பெருமையையும் தந்துள்ளது.
The post 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.