ஊட்டி,ஆக.31: ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பார்சிலி எனப்படும் சூப் தயாரிக்க பயன்படும் கீரை பயிாிடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனா். நீலகிரி மாவட்டத்தி் முக்கிய மற்றும் பிரதான தொழில் தேயிலை விவசாயமாகும். இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற மலை காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விளையும் இடத்திலேயே பிரஷ்ஷாக காய்கறி கிடைப்பதால் அவற்றை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நட்சத்திர ஓட்டல்களில் உயர்தர சூப் தயாரிக்க பயன்படும் பார்சிலி எனப்படும் கீரை பயிாிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதவிர காலி பிளவர் வகையை சோ்ந்த புரூக்கோலி மற்றும் சைனீஸ் கேபேஜ் உள்ளிட்டவைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன. கட்டுப்படியாக கூடிய அளவிற்கு நல்ல நிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
The post பார்சிலி உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.