தொண்டி, ஆக.31: தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் தற்போது கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. நேற்று நம்புதாளை துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் தலைமையில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நடுவர்களாக ஆசிரியை சுமதி, பாப்பா, மாலதி இருந்தனர். இதையடுத்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா பள்ளி தலை ஆசிரியர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, மாறுவேடம், நாட்டுப்புற பாடல், களிமண் பொம்மைகள் செய்தல், கதை சொல்லுதல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவி ராணி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளியில் கலைத் திருவிழா appeared first on Dinakaran.