×

அசாம் சட்டப்பேரவையில் தொழுகை இடைவேளை ரத்து: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவிப்பு

கவுகாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: அசாம் சட்டப் பேரவை கூட்டத்தின் போது வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம் எம்எல்ஏக்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு 2 மணி நேரம் இடைவேளை வழங்கப்பட்டு வந்தது. இனி அடுத்த கூட்ட தொடரில் இருந்து இந்த நடைமுறை ரத்து செய்யப்படும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை எடுத்ததற்காக சட்டபேரவை சபாநாயகர் பிஸ்வஜித் தய்மாரி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 2 மணி நேர இடைவேளை நடைமுறை கடந்த 1937ல் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் லீக் தலைவர் சையது சாதுல்லா என்பவர் இதனை அறிமுகப்படுத்தினார். காலனித்துவ அடையாளங்களுக்கு விடை கொடுக்கும் அசாம் சட்ட பேரவையின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

The post அசாம் சட்டப்பேரவையில் தொழுகை இடைவேளை ரத்து: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Assam Assembly ,Chief Minister ,Himanta Biswa Sharma ,Guwahati ,Assam ,Assam Legislative Assembly ,Muslim MLAs ,
× RELATED அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை