×

‘லால் சலாம்’ முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை கிரிக்கெட் பின்னணியில் உருவாக்கி வருகின்றனர்.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது படத்தின் குழுவினர்களில் முக்கியமானவர்களுக்கு விருந்து வைத்த அவர் இதுகுறித்த ஜாலியான புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

The post ‘லால் சலாம்’ முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Rajinikanth ,Rajinikanth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா...