×
Saravana Stores

பெண்கள் விடுதியில் ஆண்கள் பணியில் ஈடுபடும்போது விடுதி வார்டன் அருகே இருக்க வேண்டும்: ஆட்சியர் பிரதீப் குமார்!

திருச்சி: திருச்சி என்.ஐ.டியில் பாதுகாப்பு குறைபாடு உறுதி என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். திருச்சி என்.ஐ.டி. விடுதி கண்காணிப்பாளர், மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவிகள் விடுதியில் மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடிய விடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு, விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாணவிகளின் ஆடை குறித்து விமர்சனம் செய்த விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். பின்னர், மாணவிகள் போராட்டத்தை அடுத்து என்.ஐ.டி.யில் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நேரில் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு போராட்டத்தை அடுத்து மாணவிகளிடம் விடுதி கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்டார்.

விடுதி கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்டபின் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி சென்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது; திருச்சி என்.ஐ.டியில் பாதுகாப்பு குறைபாடு உறுதி. காவல் மற்றும் வருவாய்த் துறையினர் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்துள்ளனர். பெண்கள் விடுதிக்குள் ஆண் பணியாளர்களை அனுமதித்ததில் இருந்தே பாதுகாப்பு குறைபாடு உறுதியாகிறது. வார்டன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து என்.ஐ.டி. நிர்வாகம் முடிவெடுக்கும். பெண்கள் விடுதியில் ஆண்கள் பணியில் ஈடுபடும்போது விடுதி வார்டன் அருகே இருக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post பெண்கள் விடுதியில் ஆண்கள் பணியில் ஈடுபடும்போது விடுதி வார்டன் அருகே இருக்க வேண்டும்: ஆட்சியர் பிரதீப் குமார்! appeared first on Dinakaran.

Tags : Aadsir Pradeep Kumar ,Trichy ,Trichy N. I. ,Ruler ,Pradeep Kumar ,Diil ,Trichy National Technological University ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த...