×
Saravana Stores

நீர்வரத்து அதிகரிப்பு; குற்றால அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தொடர்ச்சி: குற்றால அருவிகளில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் பாறையை ஒட்டியே தண்ணீர் விழுந்தது.

நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், செங்கோட்டை, குற்றாலம், திரவியநகர், மத்தளம்பாறை பகுதியிலும் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது தொடர் சாரல் மழையால் அங்குள்ள அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஐந்தருவிக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என நினைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அருவிகளில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளார்.

 

The post நீர்வரத்து அதிகரிப்பு; குற்றால அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை! appeared first on Dinakaran.

Tags : Kurdala ,Kurdala Falls ,Western Ghats ,Courtalam ,Main Falls ,Five Falls ,Dinakaran ,
× RELATED செண்பகத்தோப்பில் மூலிகை துணிகள்...