×
Saravana Stores

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு டி.கே.சிவகுமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய சிபிஐ மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மீதான வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்த புகாரை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்தை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்ததாக கடந்த பாஜ ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த புகாரை சிபிஐ விசாரணை நடத்த கடந்த பாஜ ஆட்சியில் முதல்வராக இருந்த எடியூரப்பா கடந்த 2019 ம் ஆண்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.
மாநில அரசின் முடிவை எதிர்த்து பாஜ எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் மற்றும் சிபிஐ தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை ஆக.12ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை ஆக.29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இவ்வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் கே.சோமசேகர் மற்றும் உமேஷ் எம்.அடிக ஆகியோர் வழங்கினர். இதில் டி.கே.சிவகுமார் மீதான வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்த புகாரை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்ததை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த சிபிஐ மற்றும் பசனகவுடா பாட்டீல் யத்னால் ஆகியோரது மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். மனுதாரர்கள் அவசியம் ஏற்பட்டால், உச்சநீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டனர். இதன் மூலம் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

The post வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு டி.கே.சிவகுமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய சிபிஐ மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,DK Sivakumar ,BENGALURU ,Karnataka High Court ,Karnataka ,Deputy Chief Minister ,Chief Minister ,High Court ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய விவகாரம் வருமான...