×
Saravana Stores

மதுராந்தகத்தில் மாமண்டூர் ஏரியில் மண் எடுக்கும் இடத்தை ஆர்டிஓ நேரில் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஏரியில் ரயில்வே, நெடுஞ்சாலை பணி, அரசு பணி பார் மண் எடுக்கும் இடத்தை ஆர்டிஓ தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகிலேயே உள்ளதாலும், ஏரியில் தண்ணீரின்றி வறண்டு இருந்ததாலும் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

அந்த ஏரியில் இருந்து நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காகவும், ரயில்வே பணிக்காகவும், பொது மக்களின் தேவைக்காகவும் பார் மண் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த ஏரியில் 5க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பார் மண் தோண்டி எடுத்து நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாமண்டூர் ஏரியில் மண் எடுக்கும் பணியினை மதுராந்தகம் ஆர்டிஓ தியாகராஜன், தாசில்தார் துரை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்லக்கூடாது. தார்ப்பாய் போட்டு மூடி எடுத்த செல்லவேண்டும். அதிக வேகம் செல்லக்கூடாது.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏரி மண் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

The post மதுராந்தகத்தில் மாமண்டூர் ஏரியில் மண் எடுக்கும் இடத்தை ஆர்டிஓ நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : RTO ,Mamandur lake ,Madhuranthak ,Madhuranthakam ,Thyagarajan ,Maduranthakam ,Mamantur Lake ,Madurandakam, Chengalpattu District ,Public Works Department ,Dinakaran ,
× RELATED ஒரே நாளில் 55 மனுதாரர்கள் நேரடி...