- மாஞ்சோலை
- தேசிய மனித உரிமைகள் ஆணையம்
- சென்னை
- தமிழ்நாடு
- கிருஷ்ணசாமி
- விஜய பாரதி சயானி
- தில்லி
- மான்சோலாய்
சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகார மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் விஜயா பாரதி சயானியிடமும், ஆணையத்தின் நீதிபதியிடமும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 20ம் தேதி மனு அளித்திருந்தார். புதிய தமிழகம் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தலைமை விசாரணை ஆணையர் அடங்கிய குழுவை நியமித்துள்ளது. இக்குழு மாஞ்சோலை பகுதிகளுக்கு சென்று, விசாரணை செய்து, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்: மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகார வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘மாஞ்சோலை தொழிலாளர்கள் எப்படி பாரம்பரிய வனவாசிகளாக கருத முடியும். மறுவாழ்வு நடவடிக்கைக்கான திட்டம் ஏதும் உள்ளதா’ என கேள்வி எழுப்பி, ‘இந்த வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் தொடரும்’ என உத்தரவிட்டனர்.
The post மாஞ்சோலை விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை குழு அமைப்பு appeared first on Dinakaran.