- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி
- ராஜீவ் காந்தி ஊராட்சி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார கேடுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவுநீரால் சூழ்ந்து, துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் வந்துள்ளன.
எனவே, சுகாதார துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்கவும், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யவும் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.