×
Saravana Stores

சாத்தான்குளத்தில் பாஜக மண்டல உறுப்பினர் சேர்க்கை

சாத்தான்குளம், ஆக. 29: சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சார்பில் மண்டல உறுப்பினர் சேர்க்கை மற்றும் மண்டல பயிலரங்கம் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் மகேஷ்வரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றிய பொதுச்செயலாளர் ஜெயராஜேஷ்குமார், ராஜகுமார், கணேசன், சுடலைகண்ணு, சுரேஷ் உள்ளிட்ட மண்டல, மாநில, அணி பிரிவு நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரசார பிரிவு துணைத்தலைவர் ஜோசப் நன்றி கூறினார்.

The post சாத்தான்குளத்தில் பாஜக மண்டல உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Satankulam ,Satanakulam ,Zonal Membership Admission and ,Zonal Workshop ,Satankulam Union BJP ,Thoothukudi South District ,President ,Chitrangathan ,District Vice President ,Selvaraj ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுகிறதா? ராமதாஸ் விளக்கம்