*கலெக்டர் ஆய்வு
சாத்தூர் : சாத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேட்டமலை ஊராட்சி மடத்துக்காடு கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.78 லட்சம் மானியத்தில் 86 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேட்டமலை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.26.44 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதையும், சடையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15.61 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், தெர்கூர் கிராமம் சின்னகொல்லம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் பெரியஓடைப்பட்டி கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.59 லட்சம் மதிப்பில் சங்கரலிங்காபுரம் ஊரணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் விறுவிறு appeared first on Dinakaran.