×

ஓசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில்: சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அத்திப்பள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அத்திப்பள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 11 கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக அமையும்.

இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மகேஷ்வர் ராவ், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து, இந்த மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ரெட்டி, சென்னை மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

The post ஓசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில்: சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Metro ,CHENNAI ,Chennai Metro Rail Corporation ,Hosur ,Pommachandra ,Bengaluru ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்...