×

இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து நகை பறிப்பு: தோழி கைது

சென்னை: அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் தீபா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வளசரவாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். அப்போது அனகாபுத்தூர் லெட்சுமி நகர் ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்த கோமதி(36) என்பவர்  தீபாவுக்கு அறிமுகமானார். இருவரும் தோழிகளாக பழகினர். இந்நிலையில், கோமதி நேற்று தனக்கு தெரிந்த ஆண் நண்பருடன் உல்லாசம் அனுபவித்தால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார். பின்னர் தீபாவை தனது வீட்டிற்கு நைசாக அழைத்துச் சென்றார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(35) என்பவருடன் தீபா உல்லாசம் அனுபவித்தார். பிரபாகரனும், கோமதியும் சேர்ந்து தீபாவை ஆபாசப்படத்தை செல்போனில் பதிவு செய்தனர். பின்னர் தீபாவின் கழுத்தில் சரக்கு பாட்டிலை வைத்து கொன்று விடுவதாக மிரட்டினர். மேலும், தீபாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். புகாரின்படி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

The post இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து நகை பறிப்பு: தோழி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Deepa ,Anakaputtur Kamarajapuram ,Beauty Parlour ,
× RELATED நெல்லை அருகே பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்