×
Saravana Stores

கோத்தகிரி அருகே 2 நாட்கள் மிரட்டுகிறது: ஊருக்குள் புகுந்த கருஞ்சிறுத்தையால் மக்கள் பீதி: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியில் வளர்ப்பு நாயை வேட்டையாட குடியிருப்பு பகுதிக்குள் வந்த கருஞ்சிறுத்தை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் சிறுத்தைகள் மற்றும் கருஞ்சிறுத்தைகள் செல்லப் பிராணிகளான பூனை, நாய் போன்றவற்றை வேட்டையாடி செல்கின்றன. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மிளிதேன் பகுதியில் கடந்த 2 நாட்களாக கருஞ்சிறுத்தை ஒன்று உலா வரும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் மெதுவாக நடந்து வரும் கருஞ்சிறுத்தை, சாலையில் அமர்ந்து நோட்டமிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகளும், வீட்டிற்குள் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்து உலாவி பின்பு வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சமடைந்தனர். 2 நாட்களாகவே கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் கருஞ்சிறுத்தை உலா வருவதை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கோத்தகிரி அருகே 2 நாட்கள் மிரட்டுகிறது: ஊருக்குள் புகுந்த கருஞ்சிறுத்தையால் மக்கள் பீதி: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Milithen ,Nilgiri ,Kotagiri ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி அருகே பொதுமக்கள் ...