×
Saravana Stores

மசாசூசெட்ஸில் கொசுக்கள் மூலம் பரவி வரும் EEE வைரஸ் தொற்று : காய்ச்சல், வலிப்பு, தூக்கமின்மை உள்ளிட்டவை அறிகுறிகளாக ஏற்பட வாய்ப்பு!!

மசாசூசெட்ஸ் : அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் கொசுக்கள் மூலம் பரவி வரும் வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அம்மாகண அரசு தீவிரப்படுத்தி உள்ளது. EEE எனப்படும் Eastern Equine Encephalitis வைரஸ் தொற்று மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பரவத் தொடங்கி உள்ளது. இவை கொசுக்கள் மூலமே பரவுவதால் வீடுகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்து கொள்ளுமாறு மாகண சுகாதாரத்துறை மக்களை அறிவுறுத்தி உள்ளது.

அத்துடன் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் சாலைகள், குடியிருப்பு மற்றும் பூங்காக்களில் கொசுக்களை அழிக்கும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வலிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் EEE வைரஸ் தொற்று சோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. EEE வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 30% பேர் உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிப்பதால் மசாசூசெட்ஸ் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

The post மசாசூசெட்ஸில் கொசுக்கள் மூலம் பரவி வரும் EEE வைரஸ் தொற்று : காய்ச்சல், வலிப்பு, தூக்கமின்மை உள்ளிட்டவை அறிகுறிகளாக ஏற்பட வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : UNITED STATES ,Massachusetts ,
× RELATED தொடர்ந்து 4 நாட்களாக நடந்த அமெரிக்கா...