சிவகங்கை, ஆக.27: வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) லட்சுமி பிரபா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மின்னணு பரிவர்த்தனை மூலம் பல்வேறு பொருட்கள் வாங்கும் நிலையில், விவசாயிகளும் ஏடிஎம் அட்டைகள், போன் பே, ஜி பே மூலமும் தாங்கள் விரும்பும் இடுபொருட்களை வாங்கலாம். வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இடுபொருட்கள் பெற்றிட மாவட்டத்திலுள்ள 12 வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.15.89லட்சம் மதிப்பிலான இடுபொருட்களை விவசாயிகள் இம்முறையில் பெற்றுள்ளனர். அனைத்து விவசாயிகளும் இம்முறையில் இடுபொருட்கள் வாங்கி பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post வேளாண் மையங்களில் மின்னணு பரிவர்த்தனை appeared first on Dinakaran.