×
Saravana Stores

₹8.72 கோடியில் புதிய வளர்ச்சி திட்ட பணி தலைவர்கள் பிறந்த நாள் பேச்சு போட்டி

அரியலூர் ஆக 27: மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாள் பேச்சு போட்டிகளில் பங்கேற்க கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு ;
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பின்படி, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5 அன்றும், செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பெற உள்ளது.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5 அன்று வியாழன் கிழமையும், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6 அன்று வெள்ளி கிழமையும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000 , இரண்டாம் பரிசு ரூ.3,000 , மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.
இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்பெறவும் உள்ளது. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000 , இரண்டாம் பரிசு ரூ.3,000 , மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

இப்போட்டியானது காலை 9 மணிக்குத் தொடங்கப்படும் எனவும், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும், கல்லூரிக் கல்வி இயக்குநர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும் அனுமதி பெற்று இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறும் அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

The post ₹8.72 கோடியில் புதிய வளர்ச்சி திட்ட பணி தலைவர்கள் பிறந்த நாள் பேச்சு போட்டி appeared first on Dinakaran.

Tags : New Development Project Mission Leaders ,Speech Competition ,Ariyalur ,Mahatma Gandhi ,Jawaharlal Nehru ,Annal Ambedkar ,Periyar ,Perarinjar Anna ,Muthamizharinjar Kalainar ,Ariyalur District… ,New Development Project Mission Leaders Birthday Speech Competition ,Dinakaran ,
× RELATED தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி